என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரி விதிப்பு"
- சோதனை அடிப்படையில் நடத்திய ஆய்வில் 350 சதவீதம் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது.
- வரி விதிப்புக்கு உட்படுத்தாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து வரி வசூலிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை இதுவரை மாநகராட்சிக்கு வரி விதிப்புக்கு உட்படுத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் வரியை குறைத்து மதிப்பிட்டு செலுத்துவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 வார்டுகளில் சோதனை அடிப்படையில் நடத்திய ஆய்வில் 350 சதவீதம் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது. வர்த்தக, தொழிற்சாலைகள் இந்த விதிமீறலில் அதிகம் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன்காரணமாக வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படாமல் உள்ள வரியினங்கள், குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உடனடியாக தாங்களாகவே முன் வந்து மாநகராட்சியில் வரி விதிப்பு செய்து கொள்ள வேண்டும் என்று மேயர் தினேஷ்குமார் ஏற்கனவே அறிவித்தார். வரி குறைத்து மதிப்பிட்டுள்ளவர்களும் உரிய வரியை செலுத்த அந்தந்த பில்கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த மாத இறுதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கான பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள் தொடர்ச்சியாக நடந்ததால் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
அதற்கு பிறகும் வரி விதிப்புக்கு உட்படுத்தாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்து வரி வசூலிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பில்கலெக்டர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று மேயர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார். இதுதவிர தனியார் நிறுவனத்தின் மூலமாக 60 வார்டுகளிலும் வரி விதிப்புக்கு உட்படுத்தாத கட்டிடங்கள், வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்பட அனைத்து கட்டிடங்களிலும் ஆய்வு செய்து விவரங்களை சேகரிக்க உள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது.
- இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மோடி ஆட்சியில் ரூ. 29 ஆயிரம் கோடி கொரோனா மருந்துகளை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா இன்று தலைமை ஏற்றுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலா வணியை ஈட்டுத்தந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக இருந்த சாலைகள் இன்று தரமானதாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 29 லட்சம் கோடி ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- “மொத்த வணிகர்கள் அன்னிய வணிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில்லறை வணிகத்தை சீரழிக்கிறார்கள்
- நம் நாட்டு வணிகத்தை வளர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சில்லறை வணிகத்திற்கு எதிரானதாகும். அரிசிக்கு வரி கொண்டு வந்து உள்ளார்கள்.
நாகர்கோவில் :
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். அருள்ராஜ், பால்ராஜ், சலீம், ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் மணி, உயர் மட்ட குழு உறுப்பினர் கருப்பையா, பேரவை துணைத் தலைவர் ஜார்ஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்சல் அறிக்கை வாசித்தார். முடிவில் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது "மொத்த வணிகர்கள் அன்னிய வணிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில்லறை வணிகத்தை சீரழிக்கிறார்கள். எனவே சில்லறை வணிகர்களை காப்பாற்ற வேண்டும். அன்னிய வணிகத்தை ஒழிக்க வேண்டும். நம் நாட்டு வணிகத்தை வளர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சில்லறை வணிகத்திற்கு எதிரானதாகும். அரிசிக்கு வரி கொண்டு வந்து உள்ளார்கள்.
இந்தியாவில் அநேக மாநிலங்களில் அரிசி, பருப்புக்கான வரியை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர். அரிசிக்கு வரி விதித்திருப்பதை ஏற்க முடியாது. ஏழை எளிய சாமானிய மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயரும்.
எனவே இதை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் வரி விதிப்புகள் இருக்க வேண்டும்" என்றார்.
- மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்
- சொத்துவரி பொது சீராய்வு நடைபெற்று வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் புதிய கட்டிடங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம் என ஆணையர் அசோக்குமார் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
"வேலூர் மாநகராட்சியில் சொத்துவரி பொது சீராய்வு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, புதிய கட்டிடங்களுக்கு வரி விதிப்புகள் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சொத்துவரி பொது சீராய்வு பணிகள் முடிவுற்றுள்ளன.
வரி விதிப்பு செய்யப்படாத கட்டிடங்களுக்கு புதிய வரி விதிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் புதிய வரி விதிப்பு செய்ய சொத்து உரிமைக்கான பத்திரப்பதிவு நகல் மற்றும் கட்டிட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
- மத்திய-மாநில அரசுகள் வரிகளை விதித்து மக்களுக்கு வலிகளை தருகிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
- தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரையாகும் மதுரை மண்ணில் தான் தேமுதிக தொடங்கப்பட்டது.
மதுரை
மதுரையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. துணை பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது-
தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரையாகும் மதுரை மண்ணில் தான் தேமுதிக தொடங்கப்பட்டது. எங்களது திருமணம் மற்றும் குலதெய்வ வழிபாடு, அரசியல் மாநாடுகள் என்று அனைத்துமே மதுரையில் தான் தே.மு.தி.க. நடத்தி வருகிறது.
இந்த மதுரை மண்ணில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்றைக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தே.மு.தி.க. ஆளும் கட்சி அல்ல, ஆண்ட கட்சியும் அல்ல. ஆனாலும் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் நூறும் பீரும் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள் அந்த வரிசையில் தற்போது பாரதிய ஜனதாவும் சேர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் ஆளுகின்ற தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கொடுக்காத வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது மின்கட்டணத்தை உயர்த்துவோம் என்று தேர்தலுக்கு முன்பு சொல்லவில்லை. ஆனால் இப்போது மின்கட்டணத்தை அதிகரித்து இருக்கிறார்கள். அதுபோல மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற போர்வையில் மக்கள் மீது தினமும் வரியை சுமையை ஏற்படுத்தி வருகிறது கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது மத்திய-மாநில அரசுகள் வரி என்ற பெயரில் வலியை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தே.மு.தி.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தையொட்டி பழைய கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தபால் தெரு, மேட்டுத்தெரு மற்றும் காந்தி நகர் உள்ளது. இப்பகுதிகளில் வரி விதிப்பு சீராய்வு என்ற பெயரில் வீட்டுவரி அதிக அளவில் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் பொதுமக்களின் கருத்தை கேட்காமல் குடிநீர் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியும், காலை, மாலை என இரு வேளைகளில் வழங்கப்பட்ட குடிநீரை தற்போது காலை மட்டும் 1 மணி நேரத்திற்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.
இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வேலு தலைமை தாங்கினார். நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சிவா, விஜயலட்சுமி, பொது மக்கள் பிரதிநிதிகள் மோகனவேல், பலராமன், பிரமானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர். அங்கு பணியில் இருந்த பேரூராட்சி அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூறி அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காந்தி நகரில் தனியார் பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சிறு பாலத்திற்கு பக்கவாட்டு தடுப்பு சுவர்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுவரை அமைத்து தரவில்லை. இதனால் அப்பகுதியில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கொசு மருந்து அடிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டினர்.
கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பேரூராட்சி அதிகாரிகள் நரேந்திரன், கருணாநிதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
வீடுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான பிரச்சனை குறித்து மீண்டும் முறையான ஆய்வு நடத்தி பொதுமக்களை பாதிக்காத அளவில் உரிய வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்தார்.
சினிமா, தனியார் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிறவகை கேளிக்கை துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குழுவாக சென்று மும்பை நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தினர்.
உலகளாவிய அளவில் தங்களது துறைகள் மிகப்பரவலாக வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்ட இந்த குழுவினர், இந்த துறைகளுக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தி தருமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தினர்.
அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக மோடி வாக்குறுதி அளித்ததாக பிரதமரின் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
பிரதமருடனான இந்த சந்திப்பில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவகன், தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன், கதாசிரியரும் பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி, தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், சித்தார்த்த ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi
Many @harleydavidson owners plan to boycott the company if manufacturing moves overseas. Great! Most other companies are coming in our direction, including Harley competitors. A really bad move! U.S. will soon have a level playing field, or better.
— Donald J. Trump (@realDonaldTrump) August 12, 2018
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-
விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.
அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.
சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும்.
இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார். #China #Warns #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்